மற்றுமொரு பேருந்து விபத்து! 8 பேருக்கு காயம் - ஒருவர் பலி
பதுளை எல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட கரதகொல்ல - ரக்கித்தாகந்த வீதியில் பயணித்த தனியார் பேருந்தொன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையில் அண்மை நாட்களில் பேருந்து விபத்துக்கள் அதிகளவில் பதிவாகியிருந்தது.
இந்த பின்னணியில், இன்று மற்றுமொரு தனியார் பேருந்து பதுளை எல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட கரதகொல்ல - ரக்கித்தாகந்த வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணைகள்

உமாஓயா வேலைத்திட்ட பணிக்காக சென்ற பணியாளர்களை மீள வீட்டிற்கு அழைத்து சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளதாக எல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.