பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு - உயிர் பயத்தில் அலறிய பயணிகள் (படங்கள்)
Sri Lanka Police Investigation
Accident
Death
By Dharu
பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (13) காலை மின்னேரிய நகரிலிருந்து ஹிகுராக்கொட நோக்கிச் சென்ற பெருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் பாதிக்கப்பட்ட சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .
விபத்து

விபத்தில் உயிரிழந்தவர் ஹிகுராக்கொட பகுதியை சேர்ந்த 75 வயதான என்.கே. ஆரியரத்ன என்பவர் என ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது
பேருந்து திடீரென சாலையை விட்டு விலகி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது.





5ம் ஆண்டு நினைவஞ்சலி