பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
குறித்த விடயத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார்.
எரிபொருள் விலை மாற்றம்
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலை மாற்றத்தைக் கருத்தில் கொண்ட பின்னரே, கட்டண உயர்வு தொடர்பான சதவீதங்கள் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை எரிபொருள் விலை மாற்றம் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக நேற்று (25) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் உலகளாவிய விலைகள் குறையும் போது மக்களுக்கு எரிபொருள் விலையில் சலுகை வழங்கப்படும் என்றும் அனுர கருணாதிலக உறுதியளித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 21 மணி நேரம் முன்