மொனராகலை எம்பிலிப்பிட்டிய வீதியில் பேருந்துடன் லொறி மோதியதில் விபத்து
மொனராகலை தணமல்வில - எம்பிலிப்பிட்டிய வீதியின் மொரகெட்டிய மூன்றாம் கம்பம் பகுதியில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த சம்பவம் இன்று காலை (23.09.2026) இடம்பெற்றுள்ளது.
எம்பிலிப்பிட்டிய பகுதியில் இருந்து தணமல்வில நோக்கிப் பயணித்த பேருந்தின் பின்னால் உரம் ஏற்றிச் சென்ற லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
பேருந்து திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த லொறியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் பேருந்தின் பின்புறத்தில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பேருந்துக்கும் லொறிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |