பதறவைக்கும் சிசிரிவி காணொளி! தலைகீழாக கவிழ்ந்த பேருந்து - 15 பேர் வைத்தியசாலையில்..
தெமோதரை பகுதியில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
தெமோதரை நீர் விநியோக சபைக்கு அருகில் இன்று (15) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைகீழாக கவிழ்ந்த பேருந்து
இந்த விபத்தின் காரணமாக பேருந்து முற்றாக தலைகீழாக கவிழ்ந்துள்ளதுடன் விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் பயணித்த 15 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை


சம்பவம் தொடர்பில் எல்ல காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்தின் போது பதிவான சி.சி.ரி.வி காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
பேருந்து செல்லும் திசைக்கு எதிரில் வந்த சிறிய ரக வாகனமொன்றில் மோதுவதை தடுப்பதற்கு பேருந்து சாரதி மேற்கொண்ட முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து குடைசாய்ந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 மணி நேரம் முன்