கட்டுநாயக்கவில் அதிகாலைவேளை தரையிறங்கிய தொழிலதிபர் கைது
ரூ.10 மில்லியன் மதிப்புள்ள 'குஷ்' போதைப்பொருள்களை கொண்டு வந்த இலங்கை தொழிலதிபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் விமான நிலையத்திற்கு வெளியே போதைப்பொருள்களை எடுத்துச் செல்ல முயன்றபோது, காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (ஜனவரி 20) அதிகாலை கைது செய்யப்பட்டார்.
மருதானையில் வசிக்கும் தொழிலதிபர்
சந்தேக நபர் கொழும்பின் மருதானையில் வசிக்கும் ஒரு தொழிலதிபர் என்றும், அவர் உணவு விநியோக தொழிலை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர் மலேசியாவிலிருந்து 'குஷ்' போதைப்பொருள்களை வாங்கி, சிங்கப்பூருக்கு பயணம் செய்து, பின்னர் இன்று அதிகாலை 12.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
1.24 கிலோ எடையுள்ள இந்த போதைப்பொருள், அவர் எடுத்துச் சென்ற பொருட்களுக்குள் மூன்று பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களும் இன்று (20) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |