வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்கவில் தரையிறங்கியவர் கைது
வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த வர்த்தகர், விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது பயணப் பையிலிருந்து 616 கிராம் தங்க பிஸ்கட்டுக்கள் மறைத்து கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
தங்கத்தின் பெறுமதி
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

காலி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதான குறித்த வர்த்தகர் வியாழன் அதிகாலை 5.30 மணியளவில் டுபாயிலிருந்து சிறிலங்கன் எயார் லைன்ஸ் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.
விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது
இவர் விமான நிலையத்தில் சோதனைகளை முடித்துக்கொண்டு வெளியேறும்போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொண்டுவந்த தங்க பிஸ்கட்டுக்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் அவரும் ஒப்படைக்கப்பட்டார்.