கோட்டாபயவின் பெயரை பயன்படுத்தி கடற்படை அதிகாரி செய்த மோசடி அம்பலம் - உடன் விசாரணைக்கு உத்தரவு
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya)பெயரைப் பயன்படுத்தி 2.5 மில்லியன் டொலர் பெறுமதியான கப்பலை கொள்வனவு செய்ய முயற்சித்த முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த கொடுக்கல் வாங்கலில் முன்னாள் கடற்படை அதிகாரிக்கு மேலதிகமாக வர்த்தகர் ஒருவரும் சட்டத்தரணிகள் பலரும் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.இதற்கு சர்வதேச கப்பல் நிறுவனங்களின் ஆதரவும் உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் கடிதத் தலையீடும் அதன் தலைவர் ஒருவரின் கையொப்பமும் போலியாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த கப்பல் தற்போது மோதர கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு அமைச்சர் சரத் வீரசேகர காவல்துறை மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.