தமிழரின் விடிவுக்காக அறிவை ஆயுதமாக தீட்டுங்கள் என்கிறார் விக்கி
tamil
people
c-v-wikneswaran
By Vanan
இளைஞர்களே தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்று கூறியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்.
நேற்று ‘தாய்நிலம்’ என்ற ஆவணப்பட வெளியீட்டீல் இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், தமிழர் தாயக பகுதியில் 70 வருடங்களாக இடம்பெறும் நில அபகரிப்பை காலம் கடந்தாலும் ஆவணப்படமாக வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது.
வடக்கு கிழக்கில் தமிழர்களின் நிலங்களை கைப்பற்றி அவர்களின் இருப்பு, அடையாளம் மற்றும் வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கை குறித்து எடுத்துரைப்பது மிகவும் அவசியமானது என்றார்.
அத்துடன், அறிவை ஆயுதமாக தீட்டி, தமிழரின் விடிவுக்காக இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.