பெரும்போகத்துக்கு தேவையான உரம் இறக்குமதிக்கு அனுமதி
approval
import
fertilizer
By Sumithiran
எதிர்வரும் பெரும் போகத்திற்கு தேவையான உர அளவை உள்ளூர் உர உற்பத்தியாளர்கள் வழங்க முடியாததால், பெரும்போகத்திற்கு(2020/21) தேவையான கரிம உரங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச உர ஏலதாரர்கள் தேவையான உர விநியோகத்தை மேற்கொள்ள இலங்கை உர நிறுவனம் மற்றும் கொழும்பு வணிக உர லிமிடெட் ஆகியோரால் அழைக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்பு கேள்வி கோரல் பரிந்துரைகளின் அடிப்படையில் கேள்வி கோரலை வழங்க விவசாய அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதற்கு முன்னரும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச உர தடையை நீக்க உத்தரவிட்டாதக செய்திகள் வெளியான நிலையில் உடனடியாகவே ஜனாதிபதி செயலகம் அதனை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
