ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானம்
புதிய ஊழியர் சேமலாப நிதிய(EPF) முகாமைத்துவத் தொகுதி ஒன்றை உருவாக்குவதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த விடயத்தை இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு,
05. புதிய ஊழியர் சேமலாப நிதிய முகாமைத்துவத் தொகுதியை உருவாக்குதல் மற்றும் நடைமுறைப்படுத்தல்
இலங்கையின் பாரிய ஓய்வூதிய நிதியமான ஊழியர் சேமலாப நிதியத்தின் தற்போதைய மொத்த அங்கத்தவர்களின் கணக்குகளின் எண்ணிக்கை 21.5 மில்லியன்களாவதுடன், சேமலாப நிதி அனுப்பப்பட்டு இயங்குநிலையிலுள்ள சேவை வழங்குநர்களின் எண்ணிக்கை 77,000 ஆகும்.
2024 ஒக்டோபர் மாத இறுதியாகும் போது, நிதியத்தின் ஒட்டுமொத்த சொத்தின் அளவு 4.2 ட்ரில்லியன்களாவதுடன், கடந்த சில ஆண்டுகளில் அதன் சொத்துக்களின் வருடாந்த வளர்ச்சி வீதம் 9% சதவீதமான அதியுச்சளவில் பதிவாகியுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தின் நடவடிக்கைகளை நேர்த்தியாகப் பேணிச் செல்வதற்காக அதிகளவான அங்கத்தவர்களை உருவாக்கக்கூடிய பயனர் கணக்குகள் மற்றும் தரவுகளை அதிகளவில் உயரிய வினைத்திறனுடன் பேணிச் செல்வதற்கான சாத்திய வளத்துடன் கூடிய தகவல் தொழிநுட்பத் தொகுதியின் தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, புதிய ஊழியர் சேமலாப நிதியத்தின் முகாமைத்துவத் தொகுதியொன்றை உருவாக்குவதற்கும் உலக வங்கிக் குழுமத்தின் நிதிப்பிரிவு நவீனமயப்படுத்தல் கருத்திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டில் கருத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவின் PricewaterhouseCoopers Private Limited இன் ஆலோசனையின் கீழ் புதிய முகாமைத்துவ தொகுதியின் திட்டம் மற்றும் தேவையான விபரக் குறிப்புக்கள் தயாரிப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொகுதி இணைப்பு (System Integrator) தெரிவு செய்வதற்காக பெறுகைச் செயன்முறையை ஆரம்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)