வாகன உரிமையாளர்களுக்கு வெளியான தகவல்
மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கமைய வாகனங்களின் வடிவமைப்புக்களை (Design) மாற்றுதல் மற்றும் மாற்று உருவமைப்புக்களை (Modification) மாற்ற அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி , 1983 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மோட்டார் வாகனங்கள் (தயாரித்தல்) கட்டளைகள் அவ்வப்போது திருத்தப்பட்டு, வாகனங்கள் மாற்று உருவமைப்புக்கள் செய்யக்கூடிய விதங்கள் பற்றிய ஒழுங்குவிதிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அவ்வாறான கட்டளைகள் மூலம் வெளியிடப்பட்டுள்ள வாகன உதிரிப்பாகங்களைப் பொருத்துதல் மற்றும் வடிவமைப்பு மாற்றங்களுக்கு மேலதிகமாக, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் மூலம் உள்ளக பொறிமுறை மூலம் பேரூந்துகளை அலங்காரப்படுத்தல் மற்றும் மாற்று உருவமைப்புக்களுக்கான வழிகாட்டிக் கோவையொன்று தயாரிக்கப்பட்டு உள்ளக சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன கட்டளைகள்
எனினும், அதற்குரிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம், குறித்த கட்டளைகள் வெளியிடப்படவில்லை.
இவ்வனைத்து நிலைமைகளையும் கருத்தில் கொண்டு, பேருந்துகளின் அலங்காரங்கள் மற்றும் மாற்று உருவமைப்புக்களால் பேருந்துகளில் பயணிக்கின்ற பயணிகளின் பாதுகாப்புக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பற்றி ஆராய்ந்து, அதுதொடர்பாக முறைசார்ந்த வகையில் செயலாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், மேற்படி விடயங்களை செயற்படுத்த அதிகாரிகள் குழு ஒன்றை நியமிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்