அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்குமா? அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?
பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சிமெந்து ஆகியவற்றின் விலைகளில் அதிகரிப்பை மேற்கொள்ளும் வகையிலான எந்தவொரு தீர்மானமும் இன்றைய (27) அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கூடிய வாழ்க்கைச்செலவு குழு ஒரு கிலோ பால்மாவுக்கு ரூபா 200, சமையல் எரிவாயு ரூபா500,கோதுமை மா ரூபா 10, மற்றும் சிமெந்து பை ஒன்றின் விலை ரூபா 50 ஆல் அதிகரிக்க தீர்மானித்திருந்தது.
இந்த தீர்மானத்தை இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டது. எனினும் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விலை அதிகரிப்புக்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு தேவையான நிதியை, மத்திய வங்கியிலிருந்து செலுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் இன்றிரவு (27) இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.