அரசாங்கம் மீது இராஜாங்க அமைச்சர் வெளிப்படையாக விமர்சனம்
cabinet
failed
Vidura Wickremanayake
By Jaso
தற்போதைய அமைச்சரவையின் தோல்வியினால் நாடு தோல்வியடைந்துள்ளது என தேசிய மரபுரிமை கிராமிய கலைகள் மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க (Vidura Wickremanayake)தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தோல்வியடைந்துள்ளது என்பது தற்போது தெளிவாகியுள்ளது எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு விடயத்திலும் அறிவும் உணர்வும் உள்ளவர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புதிய அமைச்சரவையை நியமித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு புதிய வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும் விக்கிரமநாயக்க குறிப்பிட்டார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி