அமைச்சுப்பதவியிலிருந்து விலகுகிறார் அஜித் நிவார்ட் கப்ரால்?
ajith nivard cabraal
sted down
m.p post
By Sumithiran
நிதி மற்றும் மூலதன சந்தைகள் மற்றும் அரச நிறுவன சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சர், அஜித் நிவார்ட் கப்ரால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்க உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநராக பேராசிரியர் டபிள்யூ. டி லக்ஷ்மன் கடமையாற்றிவருகின்றார். சர்வதேச நாணய நிதியத்தில் அவருக்கு உயரிய பதவியொன்று காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் கப்ராலைத் தொடர்பு கொண்டபோது, அவர் அந்த செய்தியை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை எனவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அந்நிய செலாவணி நெருக்கடியை நாடு எதிர்கொள்ளும் நேரத்தில் கப்ரால் மத்திய வங்கியை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.