எங்களுடன் இணையுங்கள் - பதவி பறிக்கப்பட்ட சுசிலுக்கு அழைப்பு
அரச தலைவர் கோட்டாபயவினால் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவை(Susil Premajayantha), கருத்து தெரிவிக்கும் உரிமைக்காக ஐக்கிய மக்கள் சக்தியில் இணையுமாறு அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார்(Marikkar) அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று (ஜன. 4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
தம்மை நியமித்த மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"மொட்டு போன்ற மக்கள் விரோத, ஜனநாயக விரோத கட்சி இனி வேண்டாம்" என்று அறிவித்தார். எனவே ஜனநாயக உரிமைகளுக்காக மக்கள் பக்கம் நிற்க ஒற்றுமை இயக்கத்தில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இதேவேளை அமைச்சர்களான கம்மன்பில(Gammanpila), விமல் வீரவன்ச (Wimal Weerawansa)மற்றும் வாசுதேவ(Vasudeva) ஆகியோரும் அரசாங்கத்தை விமர்சித்த விதம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.
"அவர்கள் உண்மையில் மக்களின் உரிமைகளுக்காக நிற்கிறார்களா என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்," என்று மரிக்கார் கூறினார்.