பொது வேட்பாளருக்கு ஆதரவாக யாழ்.வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்ட பரப்புரை கூட்டம்
தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரனை (P. Ariyanethiran) ஆதரித்து யாழ்.வடமராட்சியில் பரப்புரை கூட்டமொன்று இடம்பெற்றது.
குறித்த கூட்டமானது நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி (Vadamarachchi), மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் வைத்தியர் சி.சிவகுமார் தலைமையில் குறித்த பரப்புரை கூட்டம் இடம்பெற்றது.
பரப்புரை கூட்டம்
கூட்டத்தில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான பா.கஜதீபன் மற்றும் விந்தன் கனகரட்ணம், அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, நேற்றையதினம் (10) அம்பாறையில் பொது வேட்பாளர் பிரசாரத்தை முன்னெடுத்த சந்தர்ப்பத்தில் காவல்துறையினர் இடையூறு விளைவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
    
    ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்
 
        
         
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        