இலங்கைக்கு எதிராக முக்கிய தீர்மானங்களை கையிலெடுத்துள்ள சர்வதேச நாடுகள்
இலங்கை (Sri Lanka) குறித்த புதிய தீர்மானமொன்றை ஐக்கிய இராச்சியமும் (United Kingdom) மற்றும் கனடாவும் (Canada) இலங்கையிடம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வு, செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் போது குறித்த தீர்மானம் முன்வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த தீர்மானம் முன்னைய தீர்மானங்களுடன் ஒப்பிடும்போது கடுமையானதாக இருக்காது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இணை அனுசரணை
முன்னர் இலங்கை குறித்த தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கிய அமெரிக்கா, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், இலங்கை குறித்த புதிய மையக் குழுவின் அமைப்பில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவுடன் முன்னைய மையக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகியவை இந்த ஆண்டு தீர்மானத்தில் பங்கேற்காமல் போகலாம் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள்
இந்தநிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் டர்க், செப்டம்பர் எட்டாம் திகதியன்று இலங்கை தொடர்பான தமது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
இதற்கு முன்பு, செம்மணிப் புதைகுழியை பார்வையிட்டுள்ளபடியால் இலங்கை குறித்த தனது அறிக்கையில் முக்கியமாக அந்த புதைகுழி இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
