கனடாவின் அறிவிப்பு -இலங்கை அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை
srilanka
canada
Ministry of External Affairs
By Sumithiran
இலங்கையின் உண்மையான நிலைமையை பிரதிபலிக்காத வகையில் கனடா வெளியிட்ட பயண ஆலோசனை தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு உடனடி கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் கனேடிய அரசாங்கம் கடந்த 13 ஆம் திகதி தனது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தலை விடுத்திருந்தது.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலைமை குறித்த தவறான குறிப்புக்கள், பெண் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டினரைத் துன்புறுத்துதல் தொடர்பான தவறான தகவல்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனவே, நாட்டில் நிலவும் உண்மைகளை கனேடிய அதிகாரிகளுக்கு தெரிவிப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை வருமாறு,