கனடாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழருக்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்டது சிறைத்தண்டனை
america
canada
court
tanil prison
By Sumithiran
இலங்கைத் தமிழரும் கனேடிய பிரஜாவுரிமை பெற்றவருமான ஸ்ரீ கஜமுகன் செல்லையா என்ற மோஹனுக்கு அமெரிக்க நீதிமன்றம் 32 மாதகால சிறைத் தண்டனை விதித்துள்ளது.
ஆட்கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்தே இவருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டள்ளது.
2019 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் அகதிகளை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. படகு பயணம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக அழைத்துச் சென்றதுடன், அவர்களுக்கு உணவு, தங்குமிடங்களையும் வழங்கி அவர்களுடனேயே அவர் பயணித்துள்ளார்.
இந்த நிலையில், அவர்மீதான குற்றச்சாட்டு கடந்த பெப்ரவரியில் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று (17) அவருக்கு 32 மாதகால சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்