ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலையா? ஸ்ரீலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்பு
canada-elathamilar-war-mullivaikkal
By Vanan
கனடாவின் ஒன்ராரியோ மாகாண சட்டவாக்கமன்றம் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் ஒரு இனப்படுகொலை என்பதை ஏகமனதாக அங்கீகரித்த நகர்வுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்கள் மீதான முள்ளிவாய்க்கால் பேரவலவத்தின் 12 ஆண்டு நினைவு அடுத்தவாரம் நினைவுகூரப்படவுள்ள நிலையில், கடந்தவாரம் ஒன்ராரியோ மாகாண சட்டவாக்கமன்றம் தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரம் சட்டத்தை ஏகமனதாக அங்கீகரித்திருந்தது.
இந்த நிலையில் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இன்று கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனை தனது பணியகத்துக்கு அழைத்து இந்தவிடயம் தொடர்பான கண்டனத்தை பதிவுசெய்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்