கனடாவில் பணவீக்கம் குறித்து வெளியான தகவல்
கனடாவின் (Canada) மொத்த பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் 2.6% ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்காலிக வரி விடுவிப்பு முடிவுக்கு வந்ததால் கனடா அரசின் வரி தளர்வு ஜனவரி மாதம் முழுவதும் நடைமுறையில் இருந்ததால், நுகர்வோர் சில பொருட்கள், உணவக கட்டணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி (GST) மற்றும் எச்டிஎஸ்டி (HST) வரிச் சலுகை பெற்றனர்.
இருப்பினும், பெப்ரவரி 15 ஆம் திகதி இந்த வரி தளர்வு முடிவுக்கு வந்ததால், பணவீக்கம் மீண்டும் உயர் நிலையில் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் அதிகரிப்பு
எதிர்வுகூறப்பட்டதனை விடவும் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, எதிர்வுகூறப்பட்டதனை விடவும் கூடுதல் அளவில் பணவீக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவக உணவின் விலைகள் 1.4% வீழ்ச்சி கண்டன ஆனால், வரி மீண்டும் அறிமுகமாகியதும் விலை அதிகரித்தது.
வர்த்தக போர்
மது பானங்கள், குழந்தைகள் உடைகள் மற்றும் பொம்மைகளின் விலையும் ஜனவரியைவிட குறைவாக இருந்தாலும், பெப்ரவரியில் சற்று உயர்ந்தன.
இந்தநிலையில், ஏப்ரல் முதலாம் திகதி கனடா அரசு நுகர்வோருக்கான கார்பன் வரியை நீக்க உள்ளதால், இது பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கனடா மற்றும் அமெரிக்க வர்த்தக போர் மேலும் விலைகளை உயர்த்தவும் வாய்ப்பு உள்ளதாக பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்