சர்ச்சையில் சிக்கிய கனடா அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி

Government of Canada Canada Gary Anandasangaree
By Thulsi Jul 17, 2025 02:16 AM GMT
Report

கனடா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree), விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதை ஆதரித்து ஹரி ஆனந்தசங்கரி இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடா (Canada) எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு தொடர்புடைய கடிதங்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கனடாவில் விமானத்தை கடத்திய மர்ம நபரால் பரபரப்பு

கனடாவில் விமானத்தை கடத்திய மர்ம நபரால் பரபரப்பு

நிரந்தர கனேடிய குடியுரிமை

ஹரி ஆனந்தசங்கரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தக் கடிதங்களைச் சமர்ப்பித்ததாகவும், தொடர்புடைய நபருக்கு விடுதலைப் புலிகளுடன் அவருக்கு நேரடித் தொடர்புகள் இருப்பதாகக் கூறி, அந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை பல சந்தர்ப்பங்களில் அவரது குடியுரிமை விண்ணப்பத்தை நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்ச்சையில் சிக்கிய கனடா அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி | Canada Public Safety Minister Controversial Letter

மனிதாபிமானக் கருத்தாய்வுகளையும், அவரது குடும்பம் பிரிவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாலும், செந்தூரன் செல்வகுமார் என்ற நபருக்கு நிரந்தர கனேடிய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஹரி ஆனந்தசங்கரி சம்பந்தப்பட்ட கடிதங்களில் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதால், ஹரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

சிரியா இராணுவ தலைமையகம் மீது குண்டுவீச்சு தாக்குதல்

சிரியா இராணுவ தலைமையகம் மீது குண்டுவீச்சு தாக்குதல்

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதால், அவர் தனது அமைச்சர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவது சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளதாக கனடா பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரியின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய கனடா அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி | Canada Public Safety Minister Controversial Letter

குறித்த அறிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இது தொடர்பில் குறிப்பிட்ட விபரங்களை வழங்குவது பொருத்தமற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹரி ஆனந்தசங்கரி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதிலிருந்து இதுபோன்ற கோரிக்கைக் கடிதங்களை ஒருபோதும் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தை கனடாவில் இருக்கும் நிலையில், நபர் ஒருவரின் குடும்பம் பிரிவதைத் தடுக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட தனது கோரிக்கையாது அசாதாரணமானது அல்ல என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புக்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டேன் என்றும், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக முடிவுகளை எடுக்க மாட்டேன் என்றும் ஹரி ஆனந்தசங்கரி தொடர்புடைய அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக கனேடிய பிரதமர் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரகீத் எக்னலிகொட விவகாரம்: சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள ஷானி அபேசேகர!

பிரகீத் எக்னலிகொட விவகாரம்: சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள ஷானி அபேசேகர!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026