இந்தியாவிற்கு இராஜதந்திர வெற்றி...! கனடாவை கடுமையாக சாடிய பங்களாதேஷ் அமைச்சர்
கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் கனடா "கொலையாளிகளுக்கு" அடைக்கலம் கொடுக்கும் நாடாக மாறியுள்ளதாக பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கனடாவில் இருக்கும் காலிஸ்தான் இயக்கங்கள் இந்தியாவில் இருந்து பஞ்சாப்பை பிரிக்கும் நோக்கில் பல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு கனடா ஆதரவளிப்பதாக இந்தியா குற்றச்சாட்டி வந்தது.
இந்தியா பதிலடி
இதனை தொடந்து ஜூலை மாதம் 23 ஆம் திகதி காலிஸ்தான் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து கனடாவில் பெரும் போராட்டங்கள் கிளம்பின.
இந்த கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததோடு இந்திய தூதுவரையும் நாட்டை விட்டு வெளியேற்றியது.
இந்த விடயம் இந்தியாவை கோவப்படுத்தியது, இதற்கு பதிலடியாக இந்தியாவும் கனடா தூதுவரை நாட்டை விட்டு வெளியேற்றியது.
அதேவேளை, கனடாவிற்கான விசாவை கொடுப்பதையும் இந்தியா தடை விதித்திருந்தது.
இரு நாடுகளுக்குமிடையிலான பதற்ற நிலை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கிய நிலையில் கனடாவிற்கு ஆதரவாக அமெரிக்கா அவுஸ்திரேலியா பிரான்ஸ் போன்ற நாடுகள் முன்வந்தன.
கொலைக்காரர்களின் புகலிடம்
எனினும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்த நாடுகள் இந்தியாவிற்கு எதிராக கூட்டுக் கன்டணம் தெரிவிக்க மறுப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், இந்தியாவின் உறவு வேண்டும் இந்தியாவிற்கிடையிலான நெருக்கமான உறவை கடைப்பிடிக்க விரும்புவதாக கனடா பிரதமர் திடீரென அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், கனடா கொலைக்காரர்களின் புகலிடமாக மாறியுள்ளது. கொலையாளிகள் அங்கு சென்று தஞ்சமடையலாம் அங்கு அவர்களுக்கு அற்புதமான வாழ்வு கிடைக்கும் என பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த கொலையாளிகளால் இங்கு பல குடும்பங்கள் தூரத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, கனடா கொலைக்காரர்களின் புகலிடமாக மாறியுள்ளது என இதற்கு முன்னர் இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய செய்திகளை அறிந்து கொள்ள ஐபிசி தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் |