கனடாவில் பெண் ஒருவரின் பாரிய மோசடி : தீவிர தேடுதலில் காவல்துறையினர்
Canada
By Laksi
மக்களிடம் வீடுகளை வாடகைக்கு விடுவதாக ஏமாற்றி மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கனேடிய காவல்துறையினரால் தேடப்பட்டு வருகின்றார்.
இந்தப் பெண் எவ்வித அதிகாரமும் இன்றி, வீடுகளை வாடகைக்கு விடுவதாக கூறி பணத்தை மோசடி செய்துள்ளார்.
26 வயதான லாரிசா ரீசென்டென்ஸ் லோபஸ் என்ற பெண்ணே இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மோசடியில் சிக்கியோர் எண்ணிக்கை
மக்களை ஏமாற்றும் நோக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையில் குடியிருப்புக்களை வாடகைக்கு விடுவதாக இந்தப் பெண் இணைய தளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.
இதனை நம்பி பலர் இந்த மோசடியில் சிக்கியுள்ளதாகவும், மோசடிக்கு ஆளானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 7 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்