கனடா அதிரடி : ஹமாஸ் அமைப்பின் தலைவர்களுக்கு விதிக்கப்பட்டது தடை
Canada
Israel-Hamas War
By Sumithiran
ஹமாஸ் அமைப்பின் உயர்மட்ட தலைவர்களுக்கு எதிராக கனடா அரசாங்கம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தமை தொடர்பாக ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) உயர் அதிகாரிகளைக் குறிவைத்து பொருளாதாரத் தடைகளை கனடா வெளியுறவு அமைச்சகமான Global Affairs Canada அறிவித்துள்ளது.
ஹமாஸின் உயர்மட்ட தலைவர்கள்
இவ்வாறு பொருளாதார தடை விதிக்கப்பட்டவர்களில் ஹமாஸின் உயர்மட்ட தலைவர்கள் யாஹ்யா சின்வார் மற்றும் முகமது டெய்ஃப் ஆகியோர் அடங்குவர்.
செவ்வாயன்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், "ஹமாஸ் மற்றும் அதன் துணை அமைப்புக்கள் பிராந்திய பாதுகாப்பிற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலை" குறிவைக்கும் வகையில் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்று கூறியது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்