ஜெனிவாவில் ஸ்ரீலங்காவிற்கெதிரான யோசனைகள்! வெளிநாட்டு தூதுவர்களை அவசரமாக சந்திக்கும் ஸ்ரீலங்கா
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக முன்வைக்கப்படும் யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஸ்ரீலங்காவிற்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினோனுக்கும் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
கனேடிய உயர்ஸ்தானிகருடன் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர், ஜெனிவா மனித உரிமை பேரவையின் 46 வது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட உள்ளதாக கூறப்படும் யோசனை சம்பந்தமாகவும் ஸ்ரீலங்கா தற்போது மேற்கொண்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது சம்பந்தமாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் சாதகமான பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தூதரக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.