கனடாவில் ஆசிரியை ஒருவர் பணியிலிருந்து நீக்கம் :வெளியான காரணம்
Quebec City
Canada
World
By Laksi
கனடாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ஆசிரியை ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குபெக் மாகாணத்தில் சேவைவர் ( Survivor reality TV show ) என்ற ரியலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த ஆசிரியை பங்கேற்பதற்காக சென்ற காரணத்தினால் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
டெபோரா டி பரக்லீர் என்ற ஆசிரியையே இவ்வாறு பணி நீக்கப்பட்டுள்ளார்.
அனுமதியின்றி விடுமுறை
குறித்த ஆசிரியை அனுமதியின்றி விடுமுறை பெற்றுக் கொண்டதன் காரணமாக இவ்வாறு பணி நீக்கப்பட்டுள்ளார்.
தீவு ஒன்றில் 20 போட்டியாளர்களில் யார் இறுதி வரையில் போராடி தீவில் தங்கியிருக்கின்றார்களோ அவர்களே இந்தப் போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்