இலங்கைக்கான கனடா தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
visit
jaffna
david mckinnon
canadian high commissioner
By Vanan
இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினோன் (David Mckinnon) இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
விஜயத்தின் போது, முதலில் யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை யாழ் மாநகர சபையில் சந்தித்தார்.
இதன் போது யாழ் மாநகர முதல்வரினால் உயர்ஸ்தானிகருக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
பின், யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அவர், தற்போதைய வைத்திய சேவைகள் மற்றும் கொரோனா தொற்று நிலைமைகள் பற்றி வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமுர்த்தியிடம் கேட்டு அறிந்து கொண்டார்.
அத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையின் அருங்காட்சியக கட்டிடத் தொகுதியையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.




