கனடாவில் உலகிலேயே அதிக மன அழுத்தத்தில் தொழிலாளர்கள் ...! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
உலகிலேயே மிக அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகும் தொழிலாளர்களில் கனடியர்கள் (Canada) முன்னிலையில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயம் 2024 ஆம் ஆண்டிற்கான ஸ்டேட் ஒப் க்லோபல் வேர்க்பிளேஸ் “State of the Global Workplace” அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது, 58% கனடியர்கள் "நாளில் பெரும் பகுதி நேரம் மன அழுத்தம் உணர்கிறோம் என பதிலளித்துள்ளனர். இது உலக சராசரி அளவை விட 18 சதவீத புள்ளிகள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
போராடிக் கொண்டிருப்போர்
இதில் கனடியர்கள் வாழ்க்கையில் பெற்ற மதிப்பீடுகள் சராசரியை விட அதிகமாக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் அதிகமான மன அழுத்தம் அனுபவிப்பதாக கூறியவர்களின் விகிதம் மிக உயர்வாக காணப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 33% பேர் தங்களை "வாழ்வில் சிறந்து விளங்கும்" (Thriving) என Gallup வகைப்படுத்தியது.
- 58% பேர் "போராடிக் கொண்டிருப்போர்" (Struggling)
- 9% பேர் "துன்புறுவோர்" (Suffering) என மதிப்பீடு செய்யப்பட்டனர்
- Thriving என வகைப்படுத்தப் பட்டவர்கள், தங்கள் தற்போதைய நிலைமையை 7/10 அல்லது அதற்கு மேல், எதிர்கால நம்பிக்கையை 8/10 அல்லது அதற்கு மேல் என மதிப்பீடு செய்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஆய்வில் பங்கேற்ற 50 வீதமானோர் வேறு வேலை வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
