தீவக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் : கனடா தூதுவர் விரிவாக ஆராய்வு
இலங்கைக்கான(sri lanka) கனேடிய(canada) உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் (ERIC WALSH )மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிராடோவிற்கும் இடையில் இன்று சனிக்கிழமை(12) காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம்(jaffna) புங்குடுதீவில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் மெசிடோ நிறுவனத்தின் பணியாளர்கள் தீவக பெண்கள் வலையமைப்பு,மீனவ சமூகத்தினர்,மற்றும் சிவில் சமூகத்தினரையும் இணைத்து கூட்டுக் கலந்துரையாடலாக இடம்பெற்றது.
தீவக மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள்
இதன்போது யாழ் தீவக மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கனடா தூதுவருக்கு நன்றி தெரிவிப்பு
மேலும் கனேடிய அரசினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற உதவித் திட்டங்கள் மற்றும் வடகிழக்கு மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்களுக்கு வடகிழக்கு மக்கள் சார்பாக அவர்கள் தமது நன்றியை தெரிவித்தனர்.
இதன்போது வடக்கு கிழக்கு மக்கள் முகங்கொடுக்கும் பல்வேறு சவால்கள் குறித்தும் கனேடிய தூதுவரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |