ட்ரம்புடன் வலுக்கும் முறுகல் : கனடா பிரதமரின் அதிரடி நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(trump), கனாடாவிலிருந்து(canada) இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிவிதிப்பை அதிகரித்ததை அடுத்து இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப்போர் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் மக்கள் ஆணையை பெறும் வகையில் முன் கூட்டியே தேர்தலை நடத்தும் வகையில் பிரதமர் மார்க் கார்னி(mark carney) நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி கனடா நாடாளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மார்க் கார்னி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
கனடா நாடாளுமன்றத் தேர்தல்
கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியிலிருந்து விலகினார்.
இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.அவர் கடந்த 14-ம் திகதி கனடாவின் 24-வது பிரதமராக பதவியேற்றார்.
தற்போதைய கனடா நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற ஒக்டோபர் மாதம் வரை உள்ள நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த மார்க் கார்னி அழைப்பு விடுத்தார்.
அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ம் திகதி கனடா நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.
ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை
தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் மார்க் கார்னி பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் கனடா-அமெரிக்கா இடையே சிக்கலான வர்த்தக உறவு நீடிக்கும் நிலையில் அதற்கான தீர்வுகளை முன்வைத்து பிரதமர் மார்க் கார்னி பிரசாரம் செய்வார் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 மணி நேரம் முன்
