காசாவில் உள்ள கனேடியர்கள் வெளியேற தடை :கனடா அமைச்சர் கடும் கோபம்
காசாவில் இருந்து வெளியேறும் கனேடியர்களின் குடும்பங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காசாவில் உள்ள 1,000 பேரின் பட்டியலை இஸ்ரேல் மற்றும் எகிப்திய அதிகாரிகளுக்கு கனடா வழங்கிய ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர்கள் குடும்பத்துடன் கனடாவுக்கு செல்வதற்காக, யாரும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்று கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
கடும் கோபத்தில் அமைச்சர்
"நான் அதைப் பற்றி மிகவும் கோபமாக இருக்கிறேன்," என்று மில்லர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இது ஒரு மனிதாபிமான சைகை
"இந்த மக்களை வெளியே விடலாமா என்றுசிலருக்கு அச்சம் இருக்கலாம், ஆனால் இது ஒரு மனிதாபிமான சைகை, அது எனக்கு மிகவும் வெறுப்பாக இருக்கிறது," என்று அவர் கூறினார்.
பட்டியலில் உள்ளவர்கள் வெளியேறுவதை எந்த அதிகாரிகள் தடுக்கிறார்கள் என்று அமைச்சர் குறிப்பிடாத நிலையில், பிரேசில் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் காசா பகுதியை விட்டு வெளியேறுவதை இஸ்ரேல் முன்பு தடுத்தது அல்லது தாமதப்படுத்தியது என்பது குறிப்பிடத்த்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |