தற்காலிகமாக கைவிடப்பட்டது அதிபர் − ஆசிரியர்களது ஊதியப் போராட்டம்
suspend
Joseph Stalin
temporarily
teacher principals trade union
By Vanan
அதிபர் − ஆசிரியர்களது ஊதியப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அதிபர் − ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
இதன் பிரதிபலனாக, வரவு செலவுத் திட்டத்தில் சம்பள முரண்பாட்டுப் பிரச்சினையை தீர்க்கும் வகையில் 30,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அதிபர் ஆசிரியர்கள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.