கிளிநொச்சியில் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீட்பு : சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!
கிளிநொச்சி - கல்லாறு கத்தோலிக்க தேவாலயம் அருகே 6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நபரொருவர் வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்றிரவு (22) 11:45 மணியளவில் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது தேவாலயப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த உரப்பை ஒன்றைக் காவல்துறையினர் மீட்டனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா
அந்த உரப்பையைச் சோதனையிட்டபோது, அதில் 3 பொட்டலங்களாகப் பொதி செய்யப்பட்டிருந்த 6.49 கிலோகிராம் கேரள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் சம்பவ இடத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் தப்பிச் சென்ற நபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்தி - காண்டீபன், லின்ரன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 20 மணி நேரம் முன்