தக்காளி வளர்ப்பு என்ற போர்வையில் கஞ்சா பண்ணை : சிக்கிய நபர்
Sri Lanka Police
Tomato
Sri Lanka Police Investigation
By Jaso
தக்காளி வளர்ப்பு என்ற போர்வையில் கஞ்சா பண்ணை நடத்தி வந்த சந்தேக நபர் ஒருவரை சூரியவெவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சூரியவெவ 14 கன்வன்வ பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தக்காளிச் செய்கையால் ஏற்பட்ட நஷ்டம்
சந்தேக நபர் சில காலமாக தக்காளியை பாரியளவில் பயிரிட்டுள்ளார். சுமார் ஒரு ஏக்கர் தக்காளி பயிரிடும் காணியில் இரகசியமாக கஞ்சா பயிரிட்டுள்ளதாக சூரியவெவ காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தனிப்பட்ட தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், தக்காளிச் செய்கையால் ஏற்பட்ட நஷ்டத்தைத் துடைக்க, சந்தேக நபர் நிலத்தில் கஞ்சாவை பயிரிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்