அலங்கோல அமெரிக்கரிடம் நாட்டை கொடுக்க முடியாது : விமல் வீரவன்ச
basil
country
Wimal Weerawansa
By Vanan
அலங்கோல அமெரிக்கரின் தேவைக்கேற்ப நாட்டை நிர்வகிக்க இடமளிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“ அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தற்போது நாட்டை நிர்வகிக்கவில்லை.
மக்களாணையை திருடி முறையற்ற வகையில் நாடாளுமன்றிற்கு வந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்சவே நாட்டை நிர்வகிக்கிறார்.
அலங்கோல அமெரிக்கரின் தேவைக்கேற்ப நாட்டை நிர்வகிக்க இடமளிக்க முடியாது.
பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தி சமூக மட்டத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் நிலைப்பாட்டில் நிதியமைச்சர் செயற்படுகிறார்” என்றார்.
You may like this video:

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்