மின்சார சபையின் அசமந்தம் : மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு நேர்ந்த துயரம்

Batticaloa Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Apr 02, 2025 12:45 PM GMT
Report

புதிய இணைப்பு

மட்டக்களப்பில் (Batticaloa) உடைந்து விழுந்த உயர் மின் அழுத்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் இன்று (02.04.2025) கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ”கல்முனை பிரதான வீதியில் இன்று (02) இடம்பெற்ற கார் விபத்தில் உயர் மின் அழுத்த மின்சாரக் கம்பம் உடைந்து விழுந்துள்ளது.

தென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தென் கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

விபத்துச் சம்பவம்

இந்நிலையில், ஸ்தலத்திற்கு விரைந்த மின்சாரசபை ஊழியர்கள் தடைப்பட்டிருந்த மின்சாரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த மகனும் தந்தையும் குறுக்கே இருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டுள்ளனர்.

மின்சார சபையின் அசமந்தம் : மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு நேர்ந்த துயரம் | Car Accident Losing Control Of Speed In Batticaloa

இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்ற தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவருடன் பயணித்த மகன் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே அதேஇடத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குறித்த மின் கம்பிகள் அறுந்திருந்தாலும் மின்சாரம் பழுதுபார்க்கும் வேலைகள் நடைபெறுகின்றன என்பது தொடர்பாக சமிக்ஞை ஏதுமின்றி மின்சார சபை ஊழியர்கள் செயற்பட்டதன் காரணமாகவே மீண்டும் அதே இடத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக அங்குள்ள பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முதலாம் இணைப்பு

மட்டக்களப்பில் (Batticaloa) வேக கட்டுப்பாட்டை இழந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் இன்று (02.04.2025) கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்து பிரதமர் பதவியில் மாற்றம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்து பிரதமர் பதவியில் மாற்றம்

காவல்துறை விசாரணை

இந்த விபத்தில் காரின் சாரதி காயமடைந்துள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மின்சார சபையின் அசமந்தம் : மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு நேர்ந்த துயரம் | Car Accident Losing Control Of Speed In Batticaloa

அத்துடன், உயர் மின் அழுத்த மின்சாரக் கம்பம் உடைந்து விழுந்துள்ளதால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

தனியார் துறை ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

தனியார் துறை ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

தமிழ் தேசியத்தின் உண்மையான துரோகி சாணக்கியன் : அம்பலமாகும் உண்மைகள்

தமிழ் தேசியத்தின் உண்மையான துரோகி சாணக்கியன் : அம்பலமாகும் உண்மைகள்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026