யாழில் கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார் விபத்து
Jaffna
Sri Lanka
Canada
By Sathangani
யாழ்ப்பாணம் (Jaffna) - நாவற்குழியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நாவற்குழி - மாதா கோவிலடியில் நேற்றிரவு (17) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதலுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூவர் பயணித்த வாகனம்
எனினும் இந்த விபத்தின்போது வாகனத்தில் பயணம் செய்த மூவருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.
கனடாவில் இருந்து வந்த பெண், அவரது கணவர் மற்றும் 5வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஆகியோர் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் சாரதியின் நித்திரை கலக்கமே விபத்துக்கான காரணம் என அறியமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்