பௌத்த பிக்குவின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு
பௌத்த பிக்கு ஒருவரின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் எரியூட்டப்பட்ட நிலையில், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா, ஹேனேகம பிரதேசத்திலுள்ள விகாரையின் கலபாலுவாவே தம்மரத்ன தேரர் (45) மீது சொகுசு காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிழந்தார்.
தாம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் எனவும் தமக்குக் கிடைத்த தகவலின் பேரில் சோதனையிட வந்ததாகவும் தெரிவித்து சந்தேகநபர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சொகுசு கார்
துப்பாக்கி சூட்டின் பின் குறித்த பிக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், கலபாலுவாவே தம்மரதன தேரரின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சொகுசு கார் எரியூட்டப்பட்ட நிலையில், நவகமுவ பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 51 நிமிடங்கள் முன்
