கொழும்பு துறைமுகத்தில் பற்றி எரிந்த சரக்கு கப்பல்
Colombo
Sri Lankan Peoples
By Dilakshan
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றில் தீ விபத்தும் வெடிப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீ விபத்தானது, இன்று (11) அதிகாலை இடம்பெற்றதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன் போது, துறைமுக தீயணைப்புப் பிரிவு உட்பட துறைமுக ஊழியர்கள் தீயைக் கட்டுப்படுத்திஅணைத்ததாகவும், தீயை அணைக்க முடியாமல் போயிருந்தால் பெரும் அழிவு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கப்பலுக்கு சேதம்
மேலும், தீயினால் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவத்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த தீ விபத்தினால் சரக்கு கப்பலுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்