வெனிசுலாவில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவக் குவிப்பு: அதிகரிக்கும் பதற்றம்
அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வை வெனிசுலாவிற்கு (Venezuela) அனுப்ப ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்க இராணுவம் கடந்த இரண்டு மாதங்களாக கரீபியன் கடலில் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், கடற்படையினர், ஆளில்லா விமானங்கள் மற்றும் உளவு விமானங்களை குவித்து வருகின்றது.
இது பல தசாப்தங்களாக அங்கு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய இராணுவக் குவிப்பு என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குண்டுவீச்சு விமானங்கள்
இந்தநிலையில், பி-52 ரக நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்கள் வெனிசுலா கடற்கரையில் குண்டுவீச்சுத் தாக்குதல் செயல்விளக்கங்களை நடத்தியுள்ளன.

இதனடிப்படையில் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வை வெனிசுலாவிற்கு அனுப்ப ஒப்புதல் அளித்துள்ளார்.
மிகப்பெரிய விமானம்
அத்தோடு, உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பல் (aircraft carrier) அப்பகுதிக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.

வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதிகளை சிறிய கப்பல்கள் ஏற்றிச் செல்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.
தற்போது, அந்த சிறு படகுகள் மீது நடத்திய தாக்குதல்களில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சட்டபூர்வமான தன்மை
இருப்பினும், படகில் இருந்தவர்கள் பற்றிய ஆதாரங்களையோ விவரங்களையோ வழங்காமல் அமெரிக்கா இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்கள் அப்பகுதியில் கண்டனங்களை ஈர்த்துள்ளன அத்தோடு நிபுணர்கள் அதன் சட்டபூர்வமான தன்மையையும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவை போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போராக அமெரிக்காவால் தெரிவிக்கப்பட்டாலும், இதன் அறிகுறிகள் யாவும் இது உண்மையில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவியில் இருந்து அகற்ற முயலும் ஒரு மிரட்டல் நடவடிக்கை என சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்