நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் : மாவை சேனாதிராஜா

Sri Lankan Tamils Mavai Senathirajah SL Protest
By Vanan Oct 18, 2023 11:59 AM GMT
Report

தமிழ் மக்களுக்கான நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று(18.10.2023) நடைபெற்ற ஊடகசந்திப்பில் இந்தக் கருத்தினை தெரிவித்த அவர், வடக்கு - கிழக்கு தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நீதித்துறையில் தமிழ் மக்களுக்கான இடம்

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான நீதியான விசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகுவதை சுட்டிக்காட்டியும், கண்டித்தும் தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிர்வரும் 20ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் : மாவை சேனாதிராஜா | Carry Out Protest Tamil People Call Mavai

அவர் மேலும் தெரிவிக்கையில், "நீதித்துறையில் தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச நீதி இல்லை என்ற நிலவரம் உருவாக்கப்பட்டிருக்கின்றது . இதற்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

சட்டத்தரணிகள் வடக்கு, கிழக்கு, கொழும்பு என்று இதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களுடன் இணைந்து பல்வேறுபட்ட அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இதற்கான போராட்டங்களை நடத்தி வருகின்றன.

வடக்கு, கிழக்கு மாகாண மக்களது கோரிக்கைகளுக்கு இணங்க நாங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். இது தொடர்பாக வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய கட்சிகள், பொது அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த விடயங்களை முன்னெடுப்பார்கள்.

மறுக்கப்படுகின்ற நீதி

ஆகவே இலங்கையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகின்ற நீதியை நாம் தான் உருவாக்கவேண்டும்.

நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் : மாவை சேனாதிராஜா | Carry Out Protest Tamil People Call Mavai

சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகின்ற நீதியை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்காமல், தமிழ் மக்களுக்கான ஒரு பாதுகாப்பை உருவாக்க வேண்டிய தேவை ஒன்று வந்திருக்கின்றது.

இந்தப் பாதுகாப்பை உருவாக்குவதற்கான நடைமுறைகளை சர்வதேசம் யோசிக்க வேண்டிய ஒரு காலகட்டத்திற்கு வந்திருக்கிறது. ஆகவே தான் இந்த விடயத்தில் நாங்கள் ஒன்றாக இணைந்திருக்கிறோம்" என்றார்.

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024