உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முடிவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ (Hemasiri Fernando) மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர (Pujith Jayasundera) ஆகியோருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று நிறைவுக்கு வந்துள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு பதில் நீதவான் சஞ்சய கமகே (Sanjaya Gamage) முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகள் இருவருக்கு எதிராக மூவரடங்கிய விஷேட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்திருந்தனர்.
அதன்படி அவர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை நிறைவு செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பதில் நீதவான் குறித்த வழக்கு விசாரணைகளை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர்.