ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் ஜனவரி 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த இரண்டாவது வழக்கில், ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் உயர் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எனவே, கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது, பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என வெளியிட்ட கருத்தினூடாக நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவரிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு சட்டமா அதிபர் தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குற்றவாளியாக அறிவித்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில், நீதிபதிகள் தமது கடமைகளை முன்னெடுக்கும் போது சட்ட ரீதியாக எந்த அதிகாரமுமின்றி அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தமை அல்லது அழுத்தம் கொடுக்க முயற்சித்தமை தொடர்பில் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பிலேயே இன்று உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டடுள்ளார்.
இதன்போதே குறித்த தீர்மானத்தினை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
