செய்மதி தொலைபேசிகளுடன் இந்திய பிரஜை கைது
iPhone
Sri Lanka Police
India
By Sumithiran
செய்மதி தொலைபேசிகள்
கொதட்டுவ, படலந்த ஹேன வீதியிலுள்ள வீடொன்றில் ஹெரோயின் மற்றும் மூன்று செய்மதி தொலைபேசிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து 76 கிராம் 330 மில்லிகிராம் ஹெரோயின், 3 செய்மதி தொலைபேசிகள் மற்றும் 7,82,000 ரூபா பணத்தையும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி ஒரு மில்லியனை அண்மித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்திய பிரஜை
கைது செய்யப்பட்டவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிவா எனப்படும் நந்தகுமார சிவானந்தன் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்