சர்ச்சையான முறையில் இந்திய கடவுச்சீட்டை பெற்ற இலங்கையர்களுக்கு பேரிடி
இந்திய கடவுச்சீட்டுக்களை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பெற்றுக் கொண்ட இலங்கைர்கள் (Sri Lankans) தொடர்பிலான விசாரணைகள் இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவான சீ.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த மோசடிகளின் இந்தியாவின் (India) தெலுங்கானா மாநிலத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடவுச்சீட்டு இரத்து
இதன் படி, இலங்கையர்கள் உட்பட பல்வேறு நாட்டவர்களுக்கு தெலுங்கானாவில் நூற்றுக் கணக்கான கடவுச் சீட்டுகள் போலி ஆவணங்கள் விநியோகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் இறுதியாக விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்களை இரத்துச் செய்வதற்கான உத்தரவு இந்திய வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
விசாரணை
மேலும், இது குறித்த விசாரணைகளில் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு இலங்கையர்களது கல்வி சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் முக்கியமான காவல்துறை அதிகாரிகள் ஆதரவு வழங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வாறானதொரு பின்னணியில், இந்திய வெளிவிவகார அமைச்சு இது தொடர்பல் தீவிர கவனம் செலுத்தியுள்ளதுடன், விசாரணைகளை சீ.பி.ஐக்கு மாற்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |