இலங்கையின் பொருளாதாரம் அமெரிக்காவின் கைகளில்..!
இலங்கையின் பொருளாதாரம் அமெரிக்காவில் இருந்து கட்டுப்படுத்தப்படுவதாக இலங்கையின் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்திலிருந்து நேற்று (6) வெளியேறும் போது சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நிதி வசதி தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான IMF அறிக்கையின் 151 பக்கங்களை தான் வாசிக்கப்பட்டது.
திருத்த முடியாத சூழ்நிலை
உலகளாவிய கடன் வழங்குனரால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்வது இலகுவானதாக இருக்காது.
அவற்றைத் திருத்த முடியாத சூழ்நிலை உள்ளது. என்னிடம் பேசுவதில் அர்த்தமில்லை. ஆட்சியாளர்களுடன் பேசுவதில் அர்த்தமில்லை.
நீங்கள் வாஷிங்டனுக்குச் சென்று இந்தக் கேள்விகளை முன்வைக்க வேண்டும்.
ஏனென்றால் அவர்கள்தான் நாட்டையும் பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள்." என தெரிவித்தார்.
