போர்நிறுத்தத்தை ஏற்றது ஹமாஸ் : காசாவில் அமைதி திரும்புமா..!
எகிப்து(Egypt) மற்றும் கத்தார்(Qatar)ஆகிய நாடுகள் முன்வைத்த போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ்(Hamas) அமைப்பு அறிவித்துள்ளது.
அந்த அமைப்பை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே(Ismail Haniyeh), கத்தார் பிரதமர் மற்றும் எகிப்திய தலைவர்களுக்கு இந்த யோசனையை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆய்வு செய்யும் இஸ்ரேல்
இதேவேளை ஹமாஸ் ஏற்றுக் கொண்ட போர்நிறுத்தப் பிரேரணையை இஸ்ரேல் அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் முன்மொழிவைப் பெற்றுள்ளோம், அதை மதிப்பாய்வு செய்கிறோம். இது ஒப்புக் கொள்ளப்பட்ட கட்டமைப்பு அல்ல. நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம், ”என்று பெயர் தெரியாத வெளியிட விரும்பாத அதிகாரி AFP இடம் கூறினார்.
மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் பலஸ்தீன மக்கள்
இதனிடையே போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்த நிலையில் இடம்பெயர்ந்து ரபாவில் தங்கியுள்ள பலஸ்தீன மக்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |