பிரித்தானிய உயர்மட்டகுழு அநுரகுமாரவுடன் முக்கிய பேச்சு
ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லர்(Ben Mello) இன்று(06) பிற்பகல் ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை(Anura Kumara Dissanayake) சந்தித்தார்.
பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இலங்கைத் தலைவர் ஹுமைரா ஹதியா(Humaira Hatia), இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்(Andrew Patrick), பிரதம செயலாளர் டொம் சோப்பர்(Tom Soper) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்(Vijitha Herath) ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
பேசப்பட்ட விடயங்கள்
இந்த சந்திப்பில் இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை, பிராந்திய புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்
இலங்கையில் அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அண்மைக்காலமாக சீனா உட்பட முக்கிய வெளிநாட்டு தூதுவர்களும், உயர் இராஜதந்திரிகளும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகின்றனர்.
இதேவேளை அண்மையில் அநுர குமார திஸநாயக்க இந்தியா,கனடா மற்றும் சுவீடனுக்கு சென்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |